ஶ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு நல்வரவு
மஹா விஷ்ணு தான் தோன்றியருளிய எட்டு திருக்கோயில்களில் (ஸ்வயம் வியக்த ஷேத்திரங்கள்) பெரும்புகழ்பெற்ற முதன்மைக் கோயில் ஶ்ரீரங்கம் ஆகும். இது 108 பிரதான விஷ்ணு கோயில்களில் (திவ்யதேசங்கள்) முதலானதாகவும், மிகவும் புகழ்பெற்ற முதன்மையானதாகவும் மற்றும் மிகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இரு திருவரங்க திருப்பதி, பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்றும் வழங்கப் பெறுகிறது. வைஷ்ணவ பேச்சுவழக்கில் “கோயில்” என்ற சொல் இந்தக் கோயிலை மட்டுமே குறிக்கிறது. இக் கோயில் பிரமிக்கத்தக்க மிகப் பெரிய அளவு கொண்டது. இக்கோயில் வளாகத்தின் பரப்பளவு 156 ஏக்கர் ஆகும். இதில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. இந்தப் பிரகாரங்கள் கருவறையைச் சுற்றி வரக்கூடிய மிகவும் கனமான மிகவும் பெரிய மதில் சுவர்களால் அமைத்துருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து பிரகாரங்களிலும், தரிசனம் பெற காணவரும் எவருக்கும் ஒரு தனித்துவமிக்க காட்சி வழங்கும்வகையில், 21 பிரமிக்கத்தக்க அற்புதமான கோபுரங்கள் உள்ளன. இந்தத் திருக்கோயில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரட்டை ஆறுகள் சுற்றியமைந்த தீவில் அமைந்திருக்கிறது.
