அருள்மிகு ஶ்ரீரங்கம் திருக்கோயில்

Sri Ranganatha Swamy Temple, Srirangam

காணிக்கை செலுத்துதல்

காணிக்கைகளை நேரடியாக கோயில் உண்டியலில் செலுத்தலாம்; இருப்பினும் உங்கள் காணிக்கை தன்மையின் காரணமாக அது சாத்தியப்படாமல் போகுமானால், அவற்றை கோயில் பணியாளரிடம் துலாபாரத்தில் ஒப்படைக்கலாம் மற்றும் அதற்குரிய இரசீதை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

துலாபாரம்

ரங்கநாதசுவாமி பெருமாளின் கடாட்சத்தை சம்பாதிப்பதற்காக கொடுக்கப்படும் மிகவும் முக்கிய வாக்குகளில் (செய்யப்படும் பிரார்த்தனைகளில்) “துலாபாரம்” கொடுப்பதும் (எடைக்கு எடை கொடுப்பதும்) ஒன்றாகும், அதாவது, பக்தரின் எடைக்கு சரிநிகரான எடையில் மஞ்சள், அரிசி, பருப்பு, நாணயங்கள், சர்க்கரை, அரிசி, வெல்லம், கற்கண்டு முதலியன போன்ற பல்வேறு பொருட்களை நன்கொடையாக வழங்குதல். பக்தர்கள் திருக்கொட்டாரம் (சேமிப்பிடம்) அருகே உள்ள துலாபாரம் கவுண்டரிடம் சென்று அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப துலாபாரத்தை நிறைவேற்றலாம். அந்தப் பொருளின் எடைக்கு சரிநிகராக நிர்ணயிக்கப்படும் விலை பக்தரிடமிருந்து வசூலிக்கப்படும் மற்றும் அதற்குரிய ஒரு இரசீது பொறுப்பு வகிக்கும் பணியாளரால் உடனடியாக வழங்கப்படும். பக்தர்கள், துலாபாரம் நிறைவேற்றுவதற்கு தங்களிடத்திலிருந்தும் பொருட்களை எடுத்து வரலாம்.

மேலும் விவரங்களுக்கு, கோயில் நிர்வாகத்தை தயவுசெய்து தொடர் கொள்ளவும்.