அருள்மிகு ஶ்ரீரங்கம் திருக்கோயில்

Sri Ranganatha Swamy Temple, Srirangam

திருமஞ்சணம்

பக்தர்கள், தாங்கள் விரும்பும் தேதியில் தாங்கள் விரும்பும் கோயில் திருமஞ்சனத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகையை செலுத்தி பங்களிக்கலாம்

தற்போதைய கட்டண வீதத்திற்கேற்ப கீழே கட்டணத்தொகை குறிப்பிடப்பட்டுள்ளது – ஏதும் மாற்றம் இருக்குமானால் அது உடனுக்குடன் மாற்றப்படும்.

இந்த திட்டத்திற்குரிய பங்களிப்புகளை, விவரங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நிகழும் சூழ்நிலைகளின் காரணமாக, நீங்கள் விரும்பி முன்பதிவு செய்த திருமஞ்சண தேதிகள், பிரசாதங்கள் ஆகியவை நிர்வாகத்தால் மாற்றப்படலாம். இது குறித்த தகவல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு srirangam@tnhrce.org. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
பணம் செலுத்தும் முறை :
1. நீங்கள் காசோலை / கேட்பு வரைவோலை (DD) / பணம் கொடுப்பாணை (பே ஆர்டர்) / பண விடை (மணி ஆர்டர்) ஆகிய ஏதாவதொருவகையில், அருள்மிகு ஶ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயில், ஶ்ரீ ரங்கம் என்ற பெயரில், திருச்சியில் பணம் கொடுபடும் வகையில் அவற்றை அனுப்பி வைக்கலாம்
2. நீங்கள், எங்களுடைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் பணத்தொகையை நேரடியாகவும் டெபாசிட் செய்யலாம். நேரடி டெபாசிட் செய்வது குறித்த விவரங்கள்: அன்னதானத்திற்கு – வேறு கணக்கு எண் பயன்படுத்தவும். திருமஞ்சணம் (01/07/2012 முதல் புதிய கட்டணவீதங்கள் நடைமுறைக்கு வந்திருக்கிறது)

Thirumanjanam (New Rates Effective from 01/07/2012)
வ.எண் பூஜை பெயர் தற்போதைய கட்டண வீதம். பொருந்தாத நாட்கள்
1 வைரமுடி சேவை inr  3,500/-
2 ஹனுமார் திருமஞ்சணம் inr   780/- சனிக்கிழமைகளில் பொருந்தாது
3 சக்கரத்தாழ்வார் திருமஞ்சணம் inr   1075/- சனிக்கிழமைகளில் பொருந்தாது
4 சிங்கர் திருமஞ்சணம் inr   1500/- சனிக்கிழமைகளில் பொருந்தாது
5 தன்வந்திரி திருமஞ்சணம் inr   1200/- வியாழன் மற்றும் & சனிக்கிழமைகளில் பொருந்தாது
6 திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் பலிபீட திருமஞ்சனம் inr   2500/-
பக்தர்கள், கட்டணத் தொகையை 1 நாள் முன்னதாக, முறைப்படி கோயிலுக்கு பொறுப்பு வகிக்கக்கூடிய பணியாளரிடம் செலுத்தலாம். பெறப்பட்ட பணத்திற்கு உடனடியாக கோயில் இரசீது வழங்கப்படும்.

வழங்கப்படும் பிரசாதங்கள்

சக்கரத்தாழ்வார் சன்னதி தயிர் சாதம், பழக்கலவை (பஞ்சாமிர்தம்), புனித தீர்த்தம்
ஹனுமார் சன்னதி தயிர் சாதம், பழக்கலவை (பஞ்சாமிர்தம்), புனித தீர்த்தம்
தன்வந்திரி சன்னதி இனிப்புப் பொங்கல், பழக்கலவை (பஞ்சாமிர்தம்), புனித தீர்த்தம்
சிங்கர் சன்னதி இனிப்புப் பொங்கல், பழக்கலவை (பஞ்சாமிர்தம்), புனித தீர்த்தம்
இணை ஆணையர் / செயல் அலுவலர் (நிர்வாக அதிகாரி)
அருள்மிகு ஶ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயில்
ஶ்ரீரங்கம், திருச்சி – 620 006.
தமிழ்நாடு, இந்தியா.